நேற்று நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். ‘கடவுள் இல்லை’ என்று சொல்பவர்கள் எந்தச் சிக்கலையும் ஏற்படுத்துவதில்லை. கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்கள் தாம் சண்டை போட்டுக்கொள்கிறார்கள் என்று பேச்சுவாக்கில் அவர் கூறினார். அவர் கூறியதை நானும் சிந்தித்துப் பார்த்தேன். கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்கள் எல்லோரும் கடவுள் வழியில் நடக்கிறார்களா என்ன?
‘நடமாடக் கோவில் பகவற்கு ஒன்று ஈயில் படமாடக் கோவில் நம்பற்கதாமே!’(நடமாடும் மனிதனுக்குச் செய்; படமாக நீ வணங்குகின்ற கடவுளுக்கு அது போய்ச் சேரும்!) என்கிறார் திருமூலர். ‘உங்களுடைய சின்னஞ்சிறிய சகோதரனுக்கு எதை எல்லாம் செய்தீர்களோ அதை எல்லாம் எனக்கே செய்தீர்கள்’ என்கிறார் இயேசு கிறித்து. ஏழைக்குக் கொடுப்பது இசுலாத்தின் கடமைகளுள் ஒன்று. ஆனால் இம்மதங்களில் தீவிரமாக இருப்பவர்கள் இதை எல்லாம் பின்பற்றுகிறார்களா? இன்னொரு மதத்தைத் தனக்கு எதிரி மதம் என நினைத்துக் கொண்டு மக்களைக் கொன்று வருகிறார்கள். இதைத் தானே மதத்தீவிரவாதம் என்கிறோம். சரி! கதைக்கு வருவோம். காசுமீர் பற்றிய கடந்த பதிவைக் கதை வடிவத்தில் பார்த்தோம் அல்லவா? இன்று மீண்டும் ஒரு கதையைப் பார்ப்போம். ஆனால் இது கொஞ்சம் புதுமையான கதையாகும். நான் ஒருவரைப் பற்றிய சில குறிப்புகளை உங்களுக்குச் சொல்லிக்கொண்டே வருவேன். நீங்கள் இவர் யார் எனக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். என்ன விதிமுறைகள் சரியா?
குறிப்புகள்:
1. இவனே முதல் மனிதன்
2. இவனுக்குப் பெற்றோர் கிடையாது. (பிறவா யாக்கைப் பெரியோன்)
3. இவனது ஆடை விலங்கின் தோலால் ஆனது.
4. இவனுக்கு மூன்றாவது கண் உண்டு.
என்ன நான் யாரைச் சொல்கிறேன் என்று கண்டுபிடித்து விட்டீர்களா? இல்லையா? சரி மேலும் சில குறிப்புகள் தருகிறேன்.
5. இவன் உடலின் ஒரு பகுதியே இவன் மனைவி.
6. இவனுடைய மனைவி ‘உலகின் தாய்’ என்று சொல்லப்படுகிறாள்.
7. இவன் குடும்பத்தின் குழப்பத்திற்கு மூல காரணம் ஒரு பழமே ஆகும்.
8. இவன் ஒரு பாம்போடு தொடர்புபடுத்தப்படுகிறான்.
9. உலகில் உள்ள அனைத்து நன்மை தீமைகளுக்கும் இவனே மூலகாரணன்.
இப்போது ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்களே! ஆம்! நீங்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருந்தால் ‘சிவன்’ என்று முடிவு செய்திருப்பீர்கள். கிறித்தவராக இருந்தால் ‘ஆதாம்’ என்று கண்டுபிடித்திருப்பீர்கள். பார்த்தீர்களா – எல்லாம் வல்ல கடவுள் ஒருவரே! நாம் தாம் அவரை வேறு வேறு மதங்களில் இருந்து கொண்டு தனித்தனிப்பார்வை பார்த்துக்கொண்டிருக்கிறோம். இனியாவது மதங்களை ஒழித்து மனிதம் காப்போம்! அதில் கடவுளைக் காண்போம்!
5 கருத்துக்கள்:
please publish thirukural in side not bottom. or no body can read. please
எந்த மதத்தின் கடவுள் பெரியவன் என்பதல்ல கேள்வி. உலகத்தில் எந்தமதம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே அது . இதுவே மதங்களுக்கு இடையே நிலவும் போட்டி அரசியல். மதங்களால் பிரச்சனை இல்லை என் மதம் தான் சரியானது மற்றவை எல்லாம் தவறானவை. மற்ற மதங்களை மக்களை மதத்தின் பெயரால் அழிக்கவும் எமக்கு உண்டு அதிகாரம் என்ற மதவாதிகளின் மதவெறிதான் பிரச்சினை. மதங்களை ஒழித்தால் பிரச்சினை தீருமா. நிச்சயாம் இல்லை. சித்தாந்தங்களின் பெயரால் போர் தொடரும். அரசியலில் மதத்தை கலக்காமல் மதத்தில் அரசியலை புகுத்தாமல் இருந்தால் சரியாகும். மதத்தின் பெயரால் பிறமக்களின் மீது மதத்தை திணித்தல், வன்முறையா அழித்தல் இவற்றை நியாயப்படுத்துதல் தவறானது. உலகில் ஒரே மதம் கடவுள், தூதுவர், புனித நூல், வழி
மட்டுமே சரியானது மற்றவை தவறானவை அழித்தொழிக்கப்பட வேண்டியவை என்பது போன்ற ஆதிக்க போக்குகள் மறுக்கப்படவேண்டும். இதுவே தீர்வாகும்.
கடவுளை நம்பாதவர்களால் எந்தபிரச்சினையும் இல்லை என்பது உண்மையில்லை. நாத்திகவாதிகளான கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் திபெத்ல் செய்வது என்ன. சோவியத் நாட்டில் செய்தது என்ன. தமது கொள்கைகளை ஏற்காதவர்களை அழிக்கவில்லையா என்ன.
மனிதனை உயர்த்தி தெய்வமாகும் முயற்சியே சமம் இதில் போராட்டம் என்பது அதிகாரப் போட்டியே அன்றி வேறில்லை.
அன்புடன்
முனைவர் கனகராஜ் ஈஸ்வரன்
மிசோராம்
நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை என்று வைத்து கொண்டாலும், பல நாத்திகர்கள் இந்து மத போதனைகளை மற்றுமே குற்றம் சாட்டி வருவது வேதனைக்குரிய விஷயமாகும் உதாரனத்திற்கு பெரியார் கொள்கையில்
ஈடுபாடு கொண்டவர்களுக்கு யேசுவையோ அல்ல அல்லாவையோ தாக்கி ஒருபோதும் பேசியதில்லை இதை நான் குறை கூறவில்லை எல்லாவற்றிற்கும் ஒரு வரை முறை இருக்கிறது... நமக்கு மேல் சக்தி ஒன்று இருக்கிறது அது நம்மை ஆட்டுவித்து கொண்டிருகிறது என்கின்ற உண்மையை பல முறை வாழ்கையில் உணர்ந்திருப்பதால் ஒவ்வொரு நாத்திகரும் தான் இறப்பதற்கு முன்னர் கடவுள் என்கின்ற சக்தியை கண்டிப்பாக உணர்வார்கள் என்று நான் நம்புகிறேன்...
நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை என்று வைத்து கொண்டாலும், பல நாத்திகர்கள் இந்து மத போதனைகளை மற்றுமே குற்றம் சாட்டி வருவது வேதனைக்குரிய விஷயமாகும் உதாரனத்திற்கு பெரியார் கொள்கையில்
ஈடுபாடு கொண்டவர்களுக்கு யேசுவையோ அல்ல அல்லாவையோ தாக்கி ஒருபோதும் பேசியதில்லை இதை நான் குறை கூறவில்லை எல்லாவற்றிற்கும் ஒரு வரை முறை இருக்கிறது... நமக்கு மேல் சக்தி ஒன்று இருக்கிறது அது நம்மை ஆட்டுவித்து கொண்டிருகிறது என்கின்ற உண்மையை பல முறை வாழ்கையில் உணர்ந்திருப்பதால் ஒவ்வொரு நாத்திகரும் தான் இறப்பதற்கு முன்னர் கடவுள் என்கின்ற சக்தியை கண்டிப்பாக உணர்வார்கள் என்று நான் நம்புகிறேன்...
Jagadeesh
ஹாய் ஜி... என்னை பொறுத்த வரைக்கும் இந்த வாதங்கள் வெறும் அரசியல் மேடைகளிலும் / வெட்டி கூட்டத்தை நடத்ர்வங்களும் மட்டும் தான் பேசிகிட்டு இருக்காங்க நம்ம தலைமுறை இந்த வட்டதிக்குள் இருந்து வெளிய வந்துட்டாங்க .... இன்னும் நாம அதை பத்தி பேசுறது அர்த்தம் இல்ல ...........
Post a Comment