Showing posts with label காவல்துறை. Show all posts
Showing posts with label காவல்துறை. Show all posts

Sep 12, 2010

காவல்துறையின் காட்டாட்சி - பதற வைக்கும் வீடியோ காட்சி

(காவல்துறையின் கண்ணியம் மிக்க வார்த்தைகள் கடைசி 15 நொடிகளில்...)
சென்னை அருகே இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்டது குறித்து தகவல் சேகரிக்க சென்ற செய்தியாளர் மீது  காவல்துறை அதிகாரி தாக்குதல் நடத்தினார். இளம் பெண் கொலையில் மர்மம் இருப்பதாக கூறப்படும் நிலையில், கொலை பற்றிய தகவல்களை மறைக்கும் நோக்கில் காவல்துறை அதிகாரி நடந்து கொண்டது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பள்ளிக்கரணையை அடுத்த சாய்கணேஷ் நகரில் இளம் பெண் ஒருவர் எரித்துகொல்லப்பட்ட நிலையில் கிடப்பதாக தகவல் பரவியது. இதனை அறிந்த செய்தியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், காவல்துறையினர் அவர்களை தகவல் சேகரிக்க விடாமல் தடுத்தனர்.
இதுகுறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய மடிப்பாக்கம் உதவி ஆணையர் தங்கரத்தினம் தகாத வார்த்தைகளாலும் சாடினார்.
அண்மை காலமாக, மடிப்பாக்கம் பகுதியில் இதுபோன்ற கொலை மற்றும் நில மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து நடவடிக்கை  எடுக்க போலீசார் தயக்கம் காட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில்கொலை பற்றிய தகவல்களை போலீஸ் அதிகாரியே மறைக்க முயன்ற சம்பவம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன் தொடர்புடைய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

Sep 9, 2010

காமவெறி காவல்துறையினரால் சிதைக்கப்பட்ட அகதி பெண்ணின் கடைசி வாக்குமூலம்

இந்த வீடியோ காட்சி மகாலிங்கம் என்ற நண்பரின் மூலம் கிடைத்தது. கரூரில் காமவெறி பிடித்த காவலர்களால் சிதைக்கப்பட்ட ஒரு அப்பாவி அகதி பெண்ணின் கடைசி கட்ட வாக்குமூலம்... எப்போதுதான் திருந்துமோ இந்த மானங்கெட்ட காவல்துறை

Aug 31, 2010

பென்சிலின் விலை சிறுவனின் உயிர்

அண்ண ஒரு கூல் டிரிங்ஸ் கொடுங்க... என கடைக்காரரிடம் உரிமையோடு கேட்கிறான் 14 வயது சுபாஷ், அப்போது அவனது கண்ணில் பட்டது அழகான கலர் பென்சில், உடனே ஆர்வ கோளாறில் பென்சிலை எடுத்து பைக்குள் வைத்துள்ளான். இதனை கவனித்த கடைக்காரர் பையன் பென்சிலை திருடி விட்டதாக நினைத்து தனது சக நண்பர்களுடன் சேர்ந்து அடித்துள்ளார். அப்போது வலி தாங்காமல் துடிக்கும் சிறுவனை அவர்கள் தாறுமாறாக அடித்து உதைத்துள்ளனர். மேலும் சிறுவனுக்கு உடம்பில் சூடு வைத்துள்ளனர்.  பின்னர் வீட்டிற்கு சென்ற சிறுவன் அவமானம் தாங்கமுடியாமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறான். இதனையறிந்த பெற்றோர் போலீஸ் நிலையத்தில் கடைக்காரருக்கு எதிராக புகார் கொடுக்கின்றனர். அப்போது அந்த கடைக்காரர் உயர் போலீஸ் அதிகாரிக்கு வேண்டபட்டவர் என்பதால் போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுக்கின்றனர். இந்த தகவல் பத்திரிக்கைகளுக்கு கசிய  புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் கண்துடைப்பிற்காக 3 பேரை கைது செய்துள்ளனர். இது நடந்தது கல்வியறிவு குறைவாக உள்ள ஜார்கண்ட் மாநிலத்திலோ அல்லது பீகாரிலோ அல்ல, சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில்தான். போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து கேட்டால், பெற்றோரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளோம். உண்மை நிலைமை எங்களுக்கு இன்னமும் தெரியாது என மழுப்புலான பதிலை கூறுகின்றனர். ஆனால் மனித உரிமை ஆர்வலர்களோ, வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் முதலில் இழுத்தடித்தது தவறு என குற்றம் சாட்டுகின்றனர். பென்சிலின் விலை சிறுவனின் உயிர் என்றால், கேட்கவே பரிதாபமாக இருக்கிறது. ஒன்று மட்டும் உண்மை, நாம், உள்ளூரில் நடக்கும் கொடுமைகளுக்கு எதிரான குரல் கொடுத்தால்தான் நமது அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் திருந்துவார்கள் என்பதை அனைவரும் மனதில் உறுதி மொழியாக ஏற்க வேண்டும். அதிகாரிகளின் பழக்கம் இருக்கிறது என்கிற தைரியத்தில் எதையும் செய்யலாம் எண்ணம் வளருவது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலுக்கு சமம் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் எழ வேண்டும்.
 
Related Posts with Thumbnails

Sample text