பாபர் மசூதி கடந்த1528ஆம் ஆண்டு முதல் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் நாள் வரை தொடர்ச்சியாக முஸ்லீம்கள் வழிபாடு நடத்தக் கூடிய ஒரு தொழுகை இடமாக இருக்கிறது. வருவாய்த் துறை ஆவணங்களின்படி அது உத்தரப்பிரதேச சன்னி ஜமாத்து வக்பு வாரியத்துக்குச் சொந்தமான ஒரு பள்ளிவாசல் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் டிசம்பர் 22ஆம் நாள் முஸ்லீம்கள் தொழுதுவிட்டு வீட்டுக்குச் சென்ற பிறகு நள்ளிரவில் சிலர் புகுந்து இராமன், இலட்சுமணன், அனுமன், சீதை ஆகியோரின் சிலைகளைப் பள்ளிவாசலின் தொழுகைத் தலைவர் (இமாம்) மக்களுக்கு அறிவுரை வழங்கக்கூடிய மேடையில் வைத்து விட்டு ‘இராமபெருமான் தம்முடைய ஜென்ம பூமியில் அவதாரம் எடுத்துவிட்டார்’ என்று சொன்னார்கள்.
Showing posts with label சட்டம். Show all posts
Showing posts with label சட்டம். Show all posts
