Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Sep 24, 2010

கடவுளுக்கே தீர்ப்பு - காமெடி கிளைமாக்ஸ்


சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம்... ராமர் அங்குதான் பிறந்தார் அதனால் இந்துக்களுக்கு சொந்தம் என்று ஒரு கூட்டம் கூறுகிறது. மற்றொரு பக்கம் பாபர் மசூதி இருந்த இடம் என்பதால் இஸ்லாமியர்களுக்கே சொந்தம் என மற்றொரு தரப்பினர் வாதிடுகின்றனர். ஒன்றை மட்டும் இரு கூட்டமுமே மறந்துவிட்டது. கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை இருப்பவர்களிடம் கேட்கும் ஒரே ஒரு கேள்வி. மனிதனை படைத்த கடவுளுக்கு கூட மனிதனால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம்தான் தீர்ப்பு சொல்ல வேண்டுமா ?

Sep 15, 2010

விதை நெல்லைச் சாப்பிடும் பசி எனக்கில்லை

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு
அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடத்தப்பட்டதுஅதில் சிறப்புரையாற்ற தமிழகத் தலைவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டனர்வரவேற்புக் குழுத் தலைவரோ அமைச்சர் ஒருவரோ தலைவர்களைச் சந்தித்து அழைக்க வேண்டும் என முடிவாயிற்றுஆனால் அண்ணா அதை ஏற்கவில்லைமாறாகத் தானே நேரில் சென்று இராசாசி, பெரியார், காமராசர், சீவா உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைத்தார்அவரது அன்பான அழைப்பை ஏற்று, மாநாட்டிற்கு இந்தத் தலைவர்கள் வந்தபோது மாநாட்டின் முகப்பில் நின்று அனைவரையும் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றவர் அண்ணா.
-       தினமணி வெளியிட்டுள்ள அண்ணா நூற்றாண்டு மலர் இதழில் பழ. நெடுமாறன்.

விதை நெல்லைச் சாப்பிடும் பசி எனக்கில்லை
            1967ஆம் ஆண்டு முதல்வர் அண்ணா, செப்டம்பர் 21,22,23 ஆகிய நாட்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார்அதில் ஒரு நிகழ்ச்சியாக, நான் கல்வி பயின்ற பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் மாலையில் உரையாற்றினார் அண்ணா.
            அண்ணாவை வரவேற்றுப் பேசிய கல்லூரி முதல்வர் இராசநாயகம் அடிகளார், ‘எங்கள் கல்லூரியில் அறிவியல் பாடம் உண்டு, பொருளாதாரப் பாடம் உண்டு, அரசியல் பாடத்திற்கு மட்டும் இடம் இல்லைநெல்லை சட்டப்பேரவை உறுப்பினரான . எல்.எசும் எட்மண்டும் எங்கள் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் என்பதால் பெருமைப்படுகிறேன்என்றார்.
            பின்னர் பேசிய அண்ணா, தனது உரையில்கல்லூரி முதல்வர் அடிகளார் அவர்கள் நான் இங்குள்ள மாணவர்களை அரசியலுக்கு அழைத்துச் சென்றுவிடுவேனோ என்று அச்சப்படுகிறார். அந்த அச்சம் தேவையில்லை. நான் மாணவர்களை விதை நெல்லாகக் கருதுபவன், விதையை விதைத்து அதனை நாற்றாக்கி நாற்றைப் பிடுங்கி வயலில் நட்டு அதிக விளைச்சல் பெற வேண்டுமென்று கருதுகின்ற அரசியல்வாதி நான்விதை நெல்லையே எடுத்துச் சமைத்து சாப்பிடுகின்ற அளவு எனக்கு அரசியலில் பசி கிடையாது
-       தினமணி வெளியிட்டுள்ள அண்ணா நூற்றாண்டு மலர் இதழில் .இல. சுப்பிரமணியன்

Sep 13, 2010

பிரதமர் ம(ண்)மோகனின் தேசிய கவலை

அருந்ததி ராய்





2010 செப்டம்பர் இருபது OUT LOOK இதழில் வெளிவந்துள்ள ஊடகவியலாளர் அருந்ததிராயின் கட்டுரையில் இருந்து சில பகுதிகள்:
Cartoon Courtesy -www.cartoonstock.com                         
            இந்திய அரசு இரண்டே இரண்டு வாரங்கள் நடத்தப்போகும் விளையாட்டுப் போட்டிக்காகத் தொள்ளாயிரம் கோடி ரூபாயைசெலவழிக்கிறது.  அத்தனையும் மக்களுடைய பணம்!  இத்தனைக்கும் தீவிரவாத அச்சுறுத்தல், மலேரியா, டெங்கு எனப் பல காரணங்களைக் கூறிப் பன்னாட்டு வீரர்கள் பலர் இப்போட்டியைப் புறக்கணித்து விட்டார்கள்.  இங்கிலாந்து இராணிக்கோ இப்போட்டிகள் (காமன்வெல்த் நாடுகள் என்பவை இங்கிலாந்திடம் அடிமைகளாக இருந்த நாடுகள் அனைத்தும்தாம்!) பற்றிக் கனவு கூட வரவில்லை.  இவ்வளவு பணத்தையும் அரசியலாளர்களும் விளையாட்டுத்துறை அலுவலர்களும் தாம் பங்கு போடப் போகிறார்கள்.  ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்கு குறைவாகச் சம்பாதிக்கும் நம்முடைய மக்களுக்கு ‘இவ்வளவும் நம்முடைய பணம்’ என்பது கூடத் தெரியாது.  அவர்களைப் பொறுத்தவரை இந்த விளையாட்டுப்போட்டிகள் எல்லாம் கண்ணுக்கெட்டாத கற்பனைதான்! 

அறுபத்து நான்காவது ஆண்டு விடுதலை நாள் விழாவில் மன்மோகன்சிங்கு எப்படிப் பேசியிருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும் என்பதன் கற்பனைதான் இது!
                        ‘சகோதர சகோதரிகளே!  நீங்கள் எல்லோரும் உணவுப்பொருள் விலை பற்றிக் கவலைப்படுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்!  நம் நாட்டில் அறுபத்தைந்து கோடிப் பேர் உழவர்களாகவும் உழவுக்கூலிகளாகவும் இருக்கிறீர்கள்!  ஆனால் பாருங்கள்!  உங்களுடைய மொத்த உழைப்பினால் பதினெட்டு விழுக்காட்டிற்கும் குறைவான அளவில்தான் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்திக்கு உதவுகிறீர்கள்!  தகவல்தொழில்நுட்பத்துறையைப் பாருங்கள்!  மக்கள் தொகையில் 0.2 விழுக்காடு தான் இருக்கும் அவர்களால் ஒட்டுமொத்த உற்பத்திக்கு ஐந்து விழுக்காட்டளவு உதவி கிடைக்கிறது.  உங்களையும் அவர்களையும் சமமாக எப்படி ஒப்பிடுவது ?
என்னருமைக் குடிமக்களே!  நூறு கோடிஸ்வர இந்தியர்களின் கைகளில் நாட்டின் இருபத்தைந்து விழுக்காட்டு உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி (GDP) இருக்குமாறு நம்முடைய பெருமைமிக்க இந்தியாவை உருவாக்கி வருகிறோம்.  சொத்து ஒரே இடத்தில் இருப்பது தானே நல்லது?  பத்துப்பேர் சேர்ந்து சமைத்தால் சாப்பாடு சுவையாக இருக்காது என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும்!  ஆகவே நமது கோடிஸ்வரர்களும் அவர்களுடைய சொந்தங்களும் அவர்களுக்கு நெருக்கமான அரசியலாளர்களும் நன்றாக வாழுமாறு நாம் பார்த்துக்கொள்கிறோம். 
             இவற்றை எல்லாம் குடியாட்சி மூலம் மட்டும் கொண்டு வந்துவிட முடியாது என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்.  ஆகவேதான் கனிமவளம் நிறைந்த பகுதிகளில் வாழ்வோரை இராணுவம், காவல்துறை, எல்லைப் பாதுகாப்புப் படை, ஆயுதப்படை, தொழிற்சாலைப் பாதுகாப்புப்படை, இந்தோ திபெத்தியப் படை எனப் பல படைகளைக் கொண்டு நொறுக்கி வருகிறோம்.  இந்த வகை ஆய்வுகளை நாகலாந்து, மணிப்பூர், காஷ்மீர் ஆகிய பகுதிகளில் தான் தொடங்கினோம். ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி என்பதை நான் சொல்லத் தேவையில்லை.  ஆகவே தான் குடியாட்சி அங்கே வர வேண்டும் என்பதற்காக அரைக் கோடிப் பேருக்கும் அதிகமான இராணுவ வீரர்களைக் களம் இறக்கியிருக்கிறோம்.  அங்கே ஊரடங்கு இருந்த போது காவல்துறை மீது கற்கள் வீசிய காஷ்மீரிய இளைஞர்கள் அனைவரும் லஷ்கர் இ – தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஆவர்.  அவர்களும் வேலை கேட்டு இப்படிக் கற்களை வீசினார்களே தவிர விடுதலை கேட்டு இல்லை!  ஆனால் ஐயோ பாவம்!  அவர்களுடைய விண்ணப்பங்களைப் படித்து என்ன வேலை கொடுக்கலாம் என முடிவெடுக்கும் முன்பே நம்முடைய காவல்துறையால் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார்கள்!  ஆகவேதான் இனிமேல் அவர்களைச் சுட்டுக்காயப்படுத்தினால் மட்டும் போதும் – கொல்ல வேண்டாம் என உத்தரவிட்டிருக்கிறேன். 


 
Related Posts with Thumbnails

Sample text