கன்னியாகுமரி மாவட்ட மீனவ மக்கள் வீட்டிற்கு மின்சார இணைப்பு வேண்டும் எனில் அரசு அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தால் வீட்டிற்கு மின்சாரம் வராதாம். அப்புறம் என்னதான் செய்ய வேண்டும் என்கிற உங்களின் சந்தேகம் நியாயம்தான். ஒவ்வொரு மீனவ கிராமங்களிலும் சுய உதவிக்குழுக்கள் போன்று அன்பயம் என்ற பெண்கள் அமைப்பு ஒன்று செயல்படுகிறது. அந்த அமைப்பின் தலைவி கையெழுத்து இட்டதால்தான் உங்கள் வீட்டிற்கு மின் இணைப்பு கிடைக்கும். அட இது அரசாங்க அமைப்பு அல்ல என்பது உங்களுக்கு கூடுதல் தகவல். அதைவிட பெரிய அமைப்பாம். மீனவ கிராமங்களில் உள்ள தேவலாயங்களின் சார்பில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் உறுப்பினர் ஆக முடியாது என்பது கூடுதல் தகவல். பெண்களால் நிர்வகிக்கப்படுகிறது என்ற போர்வையில் மத போதகர்களின் கட்டுப்பாட்டில் இந்த அமைப்பு உள்ளது. 20 பெண்கள் கொண்ட ஒரு குழுவிற்கு தலைவி ஒருவர் இருப்பார். இதேபோல் 10 முதல் 15 குழுக்கள் வரை ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளன. இந்த குழுக்களின் தலைவராக ஒரு பாதிரியார் இருப்பாராம். இதில் என்ன தவறு என நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த குழுக்களின் தலைவி அனுமதி கொடுத்தால் மட்டுமே அரசு சலுகைகள் முதல் எதுவுமே உங்களுக்கு கிடைக்குமாம். அதுமட்டுமல்ல மீனவ மக்களில் சிலர் வெளிநாடுகளில் உள்ளனர். அவர்களது குழந்தைகளுக்கு ஞானஸ்தானம் (பெயர் இடும் விழா) தேவாலயத்தில் நடத்த வேண்டும் எனில் அந்த அன்பயம் என்ற அமைப்பின் தலைவியிடம் அனுமதி பெற வேண்டும் என கூறப்படுகிறது. ஊர் கூடி தேர் இழுப்பதில் தவறில்லை. அதற்காக தங்களது குடும்ப விவகாரங்கள் முதல் அனைத்திற்கும் தேவாலய பிரதிநிதிகளிடம் கைகட்டி நிற்க வேண்டும் என்பதை பார்க்கும்போது நமக்கு இது புது வகை தீண்டாமையாகதான் தெரிகிறது. மிகவும் பிற்படுத்தபட்ட மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மதம் மாறியுள்ளனர். ஆனால் அங்கும் அடிமைதனத்தை உருவாக்குவது எவ்விதத்தில் நியாயம் என்பதே நமது கேள்வி. நமக்கு கிடைத்த ஆதாரபூர்வமான தகவலின் அடிப்படையில் இந்த கட்டுரையை எழுதியுள்ளோம். எந்த மதத்திற்கும் ஆதரவாகவோ, எதிராகவோ நினைக்க வேண்டாம் என்பதே ஜுனியர் ரிப்போர்ட்டரின் அன்பான வேண்டுகோள். இந்த புதுவகை தீண்டாமையை எதிர்த்து போராட மீனவ கிராமங்களில் இளைஞர் கூட்டம் ஒன்று தயாராகி வருகிறது என்பதையும் உங்கள் பார்வைக்கு தெரியபடுத்துகிறோம்.
Sep 18, 2010
கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைவிரித்தாடும் சாமியார்களின் அட்டகாசம்
கன்னியாகுமரி மாவட்டம் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது, கடலும், கடல் சார்ந்த மக்களும் அவர்களின் தொழிலும்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த சுனாமியின் சுவடுகள் மீனவ மக்களின் மனதை விட்டு அகலாத நிலையில் அங்குள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சாமியார்கள் நடத்தும் புது வகை கொடுமையை வெளியே சொல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர் மீனவ மக்கள்.
5 கருத்துக்கள்:
வணக்கம் ஜுனியர் ரிப்போர்ட்டரே,
ஒரு நாள் விட்டு ஒரு நாள் புதிய செய்திகளை தருவதை விட்டுவிட்டு தினந்தோறும் புதிய செய்திகளை தந்தால் நலமாக இருக்கும், உங்கள் வாசகன் வசந்த்
புதிய வடிவமைப்பு நன்றாக இருக்கிறது...
juniar you know all. stupid anpiam enbathu 24 and25 familly ok no only ladys including father mother and childernce every saterday gave one meeting you know this time gens go to sea fishing then how can comming meeting like this all dutis ladis you dont know ok dont say meany
அன்பு நண்பர் ஜஸ்டீன் அவர்களுக்கு, ஆண்களை அன்பியத்தில் சேர்த்து கொள்ளுங்கள் என்று நாங்கள் கேட்கவில்லை. ஆனால் உங்கள் வீட்டிற்கு மின் இணைப்பு பெற வேண்டும் என்றாலும் அன்பியம் என்ற அமைப்பில் அனுமதி பெற வேண்டும் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. நன்றி
Post a Comment