உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் தேன் |
இந்தியர்களின் உயிரை பற்றி எங்களுக்கு கவலை இல்லை... இப்படி கூறுவது அமெரிக்காவோ, சீனாவோ, பாகிஸ்தானோ அல்ல... நம்மை ஆளும் மத்திய அரசுதான். என்ன அதிர்ச்சியா இருக்கா ? அதைவிட பெரிய அதிர்ச்சி நம்ம உடலுக்கு நல்லது என்று நாம் விரும்பி சாப்பிடும் தேனால்தான் பெரிய ஆபத்தே இருக்கு.
டெல்லியில் இருந்து செயல்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழல் மையம் சமீபத்தில் நமது நாட்டில் விற்கப்படும் 12 பிரபல நிறுவனங்களின் தேன்களை ஆய்வு செய்தது. அது என்னென்ன நிறுவனங்கள் என்று முதலில் பார்ப்போம். டாபர் (Dabur), பைதியான்ந் (Baidyanth), பதஞ்சலி ஆயுர்வேதா (Patanjali Ayurveda), காதி(Khadi) மற்றும் ஹிமாலாயா (Himalaya) உள்ளிட்ட நிறுவனங்கள்தான். இந்த நிறுவனங்கள் சார்பில் விற்கப்படும் தேன் பாட்டீல்களில் தடை செய்யப்பட்ட ஆன்டி பயாடிக் எனப்படும் குளோரோபெனிகல், சிப்ரோ பிளாக்சின் மற்றும் எரித்ரோமைசின் போன்றவற்றின் குண நலன்கள் அதிகளவில் காணப்படுகின்றன என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த வகை ஆன்டி பயாடிக்கினால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என மருத்துவ நிபுணர் சத்யா அச்சத்துடன் எச்சரிக்கிறார்.
இதனால்தான் இந்திய வகை தேன்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய தடை உள்ளதாகவும், சர்வதேச தரத்திற்கு இந்திய நிறுவனங்களின் தேன்கள் இல்லை என்றும் அறிவியல் மற்றும் சுற்றுபுறத்துறை மையத்தின் துணை இயக்குனர் சந்திர பூஷன் ஆதாரத்துடன் தெரிவிக்கிறார். மேலும், ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் 2 நிறுவனங்களின் தேனிலும் இதுபோன்று மனித உடலை பாதிக்கும் வகையில் உள்ளது என்றும், அதனை அந்நாட்டு அரசே தடை செய்துள்ளது என்றும், ஆனால் அவை சர்வசாதரணமாக இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது என்றும் அவர் கவலையுடன் கூறுகிறார். இப்பிரச்சினை குறித்து மேலே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களிடம் எடுத்து கூறியபோது, நாங்கள் தேனை தயாரிப்பதில்லை என்றும், அதனை வெளி மார்க்கெட்டில் வாங்கி எங்களது நிறுவனங்களின் ஸ்டிக்கரை மட்டும் ஒட்டி விற்பனை செய்வதாக அந்நிறுவனங்களின் அதிகாரிகள் தங்களிடம் அலட்சியமாக தெரிவிக்கின்றனர் என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் இயக்குனர் சுனிதா நரேன் கூறினார்.
இந்த தகவல் எல்லாம் மத்திய அரசுக்கு தெரியும் என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார். இதனால்தான் மேலே கூறியபடி இந்திய உயிர்களை பற்றி மத்திய அரசுக்கு கவலை இல்லை என்று நாம் ஆணித்தரமாக கூறினோம். சரி இவர் எப்படி ஆணித்தரமாக மத்திய அரசுக்கு தெரியும் என்று கூறுகிறார் என பார்ப்போம். கடந்த 5 ஆண்டுகளாக இந்திய தேன்கள் சர்வதேச தரத்திற்கு இல்லை என ஏற்றுமதி நிறுவன ஆய்வில் கூறப்பட்டுள்ளது என்றும் ஆனால் அதனை பற்றி மத்திய அரசு சிறிதும் கவலைப்படவில்லை என்றும் சுனிதா நரேன் தெரிவித்துள்ளார். ஆனால் இவைகளை உள்ளூர் சந்தையில் விற்க மட்டும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என அவர் வருத்தத்துடன் தெரிவிக்கிறார். இந்தாண்டு ஜூன் மாதத்தில் இருந்து ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் உள்ள 27 நாடுகளும் இந்திய வகை தேன்களுக்கு தடை விதித்துள்ளன. ஆனால் இந்தியாவில்...? எதை நம்பி வாங்குவது எதை சாப்பிடுவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு பதில் அளிக்குமா மத்திய அரசு ? பொறுத்திருந்து பார்ப்போம்.
7 கருத்துக்கள்:
இந்த அரசியல்வாதிகள் அரசு பயணமாக வெளிநாடு செல்லும் போது அங்குள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களை சுரண்டி பரிசுப் பெருட்கள் (அப்படித்தான் சொல்றாங்க!) அள்ளி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு! அநேகமாக அதில் தேனும் இருக்கலாம்...அதனால்தான் இந்தியாவில் விற்கப்படும் தேன்களின் தரம் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை! இந்திய வம்ச வழியில் பிறந்து வெளிநாட்டில் வாழ்ந்தால் NRI என்கிறோம்...இந்தியாவில் பிறந்து வெளிநாட்டின் (மற்றும் வெளிநாட்டு நிறுவனக்களின்) நலனுக்காக வாழும் அரசியல்வாதிகளை எப்படி அழைக்க வேண்டும்..?
சிப்ரோ பிளாக்சின்,எரித்ரோமைசின் ஆகியவற்றை மாத்திரைகளாக தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் மக்களுக்கு வழங்கி வருகிறது. இவற்றைத் தடை செய்யப்பட்டவை என்று நீங்கள் எப்படி கூறுகிறீர்கள்?
அன்புள்ள நரேன் அவர்களுக்கு,
நீங்கள் கூறிய செய்தியை நமது நண்பர்கள் பலரும் தெரிவித்தனர். ஆனால் இந்த மருந்துகள் உயிருக்கு ஆபத்தானவை என மத்திய அரசு அறிவித்துள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம். நன்றி ஜுனியர் ரிப்போர்ட்டர்
அதிர்ச்சி தரும் செய்தி
hi
விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி..வாழ்த்துக்கள்...
Post a Comment