Sep 7, 2010

அழகிரியின் அடுத்த மூவ்

அழகிரியின் அடுத்த மூவ் - இது என்னடா புதுக்கதை என நீங்கள் குழம்ப வேண்டாம் ? மாறன் பிரதர்ஸ் இருக்கும் தைரியத்தில் ரவுடித்தனத்தில் ஈடுபட்ட சக்சேனா அன் கோ மீது வழக்குப்பதிவு செய்ய தயங்கியதாம் காவல்துறை. உடனே செக்கர்ஸ் ஹோட்டல் உரிமையாளரின் மகன் வினோஜ், அழகிரியின் மகன்துரை தயாநிதியிடம் நடந்த சம்பவங்களை கூறி அழுதாராம். உடனே சுறுசுறுப்படைந்த துரை இவ்விவகாரம் குறித்து தனது அப்பா அழகிரி மூலம் தாத்தா கருணாநிதியிடம் எடுத்து சொன்னாராம். இப்படி குடிச்சுட்டு ரோட்டுல சண்டை போட்டது மட்டுமில்லமா. திமுக கொடியோடு சென்று செக்கர்ஸ் ஹோட்டல் அடிச்சு நொறுக்கினது எந்த விதத்தில் நியாயம் என பொங்கி எழுந்தாராம் அழகிரி. (நல்ல வேலை இதெல்லாம் பார்க்கிறதுக்கு அண்ணாத்துரை உயிரோடு இல்லை) கண்டவன் எல்லாம் கட்சி பேரை சொல்லி ஊருல தகராறு பண்றதுக்கு இது சத்திரம் இல்ல என திமுக முக்கிய தலைகள் சில கருணாநிதியிடம் தூபம் போட... உடனே வழக்கை பதிவு செய்துள்ளது காவல்துறை. இதை கொஞ்சம் எதிர்பார்க்காத சக்சேனா, சிங்கப்பூருக்கு தப்பி ஓடிட்டாராம். அது மட்டும் இல்லாம கோர்ட்ல முன் ஜாமீன் கிடைத்தவ்டன் இந்தியாவிற்கு திரும்பலாம்னு மனக்கணக்கு போட்ட சக்சேனாவிக்கு அடி மேல அடி. கோர்ட்டிலையும் முன் ஜாமீன் கிடைக்கறதுல்ல சிக்கல். இதுக்கு நடுவுல வழக்கம் போல் காரியம் முடிஞ்சவுடன் கழட்டிவிடும் கலையை திரும்பவும் கையில எடுக்கலாமான்னு மாறன் பிரதர்ஸ் யோசிக்கிறாங்களாம்.  பேசாம சக்சேனா கழட்டி விட்டுறாம்ள்னு திங் பண்றாங்களாம். இதை கேட்டு சக்சேனா கூட்டம் கலங்கி போயிருக்கு. ஒன்னு மட்டும் நிச்சயமுங்க அழகிரிக்கு கிடைச்ச இந்த அல்வா சான்ஸை அவரு தவற விடமாட்டார்னு அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன. அது சரி அப்பன்னா அழகிரி-மாறன் போராட்டம் ஒயலையான்னு நீங்க கேட்கறது புரியுது.... அதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

0 கருத்துக்கள்:

Post a Comment

 
Related Posts with Thumbnails

Sample text