Sep 4, 2010

சன் நெட்வொர்க் நிர்வாகியின் அலம்பல் - சூப்பர் ஸ்டார்-சங்கர் புலம்பல்

சூப்பர் ஸ்டார் ரஜினியும், டைரக்டர் சங்கருமே மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவிச்சுகிட்டு இருக்காங்க... ஹோட்டல் ஒன்றை அடித்து நொறுக்கியதாக சன் டிவி அதிகாரி மீது வழக்கு போட்டிருக்காங்க இல்லையா... அது தொடர்பாகதான் நான் சொன்னது. இது தொலைக்காட்சி தொடர்போல ரொம்ப நீளமான கதை. பத்து, பதினைந்து நாள் சொல்ல வேண்டிய கதை, உங்களுக்காக டிரைலர் போல் சின்னதா சொல்றேன். ஹோட்டலை அடிச்சி நொறுக்கியது அந்த அதிகாரியும் ஐயப்பன்னு அவருடைய நண்பரான ஒருவரும்தானாம்...  அந்த ஐயப்பன் யாருன்னா... நெட்வொர்க் வாங்கற படத்துக்கெல்லாம் அவர்தான் டிஸ்ட்ரிபியூட்டர். நெட்வொர்க் படத்தை வாங்கினாலும், அவங்க பேர்ல அக்ரிமென்ட் இருக்காது. இந்த ஐயப்பன் பேர்லதான் அக்ரிமென்ட் இருக்கும். அதனால நெட்வொர்க் பிரதர்சிடம் ரொம்ப செல்வாக்கு மிக்கவர் இவரு. எந்திரன் படத்தை ஆந்திராவில சுதாகர்ரெட்டின்று ஒருத்தரு 26 கோடி ரூபாய்க்கு வித்திட்டாருன்னு ஒரு பரபரப்பு ஏற்பட்டது இல்லையா...அவர் கூட உதயகுமாருன்னு ஒருத்தரும் சிக்கினாரு.அந்த உதயகுமார் யாருன்னா, இயக்குனர் சங்கருடைய எல்லாபடத்துக்கும் இவர்தான் மேலாளர். அவர்தான் ஆந்திர பார்டிக்கிட்ட பேசி டீலிங்க முடிச்சு 5 கோடி ரூபாய் நெட்வொர்க் பேர்ல செக்காக வாங்கிட்டு வந்திருக்காரு. செக் அவுங்க பேருக்கு போயிட்டதால நமக்கு ஒண்ணும் கிடைக்காதேன்னு கடுப்பாகிவிட்ட சக்ஸசான பிரமுகரும், ஐயப்ப சாமியும் சேர்ந்து போர்ஜரி பண்ணிட்டாருன்னு உதயகுமார் மேல மாம்பழம் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தாங்க... அந்த புகாரின் பேர்ல உதயகுமாரை கைது செய்த காக்கிகள், ஸ்டேஷன்ல உட்கார வைச்சு சரியா கவனிச்சுட்டாங்களாம்... அப்புறமா பெயில வந்த அவரு சங்கர்கிட்டயும், ரஜினி கிட்டயும் இந்த மாதிரி பண்ணிட்டாங்களேன்னு புலம்பினாராம். அவங்க எங்களை மன்னிச்சுகோங்கோ... இந்த நெட்வொர்க்காரங்கிட்ட எங்களாலேயே ஒண்ணும் பண்ண முடியலை... என்று வருத்தம் தெரிவிச்சாங்களாம். இந்த மேட்டரை வைச்சு உள்துறை அதிகாரிக்கிட்ட நெட்வொர்க் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கணும்னு பெட்டிஷன் கொடுத்திருங்காங்க. இப்போ அந்த ஆள் தலைமறைவாயிருக்காரு. அவரை கைது பண்ணிட்டாங்கன்னா 50 பேர் புகார் கொடுக்க தயாராயிருக்காங்களாம். சுறாவின் அப்பா கூட இந்த பெட்டிஷன் கொடுக்கற லிஸ்டுல இருக்குறாராம். இவ்வளவு பேர் பெட்டிஷன் கொடுத்தா அந்த நெட்வொர்க் கதி கந்தல்தான்.  நெட்வொர்க் பிரதர்ஸ் 2 பேரும் சந்திச்சு இதைப்பத்தி பேசிக்கிட்டாங்களாம். நெட்வொர்க் அதிகாரியை போஸ்டிங்குல இருந்தே தூக்கிடலாம்னு சின்னவரு சொன்னாராம். தூக்கிட்டா வெளியே போய் எல்லாத்தையும் கக்கிடுவாரேன்னு பெரியவரு யோசிச்சாராம். அதை பத்தியெல்லாம் நினைச்சுகிட்டிருந்தால் நெட்வொர்க்கை காப்பாத்த முடியாது... சீக்கிரமா முடிவெடுங்கன்னு தம்பி சொல்ல, அண்ணன் யோசிப்போம்னு தலையாட்டி விட்டாராம்.
நன்றி ; நம் தினமதி

1 கருத்துக்கள்:

Anonymous said...

அது சரி கருணாநிதிக்காக... கலைஞர் டிவி ஆரம்பிக்க உதவிய சரத் ரெட்டியை ஆள வைச்சு அடிச்சப்ப கூட கருணாநிதி அமைதி காத்தாரே. ஒண்ணும் மட்டும் உண்மைங்க மாறன் பிரதர்ஸ் நாளைக்கு ஸ்டாலினை ஆளை வச்சு அடிச்சிட்டு ஆட்சியை பிடிச்சாளும் ஆச்சரியபடுறதுக்கு இல்ல.
நன்றி கெட்டவுங்களுக்கு மறுபெயர் மாறன் பிரதர்ஸ்

Post a Comment

 
Related Posts with Thumbnails

Sample text