Aug 27, 2010

தேர்தல் முன்னோட்டம் - விஜயகாந்தின் மன கணக்கு


அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா... விஜயகாந்துடன் கூட்டணி வைக்க தயக்கமில்லை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சொல்லி 2 வாரம் ஆகவில்லை. விஜயகாந்தின் 58வது பிறந்தநாள் விழாவுக்கு நேரில் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், விஜயகாந்த் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்வார்ன்னு புகழாராரம் சூட்டினார். இப்படி நாளுக்கு நாள் விஜயகாந்த் புராணம் படி வருகின்றனர் தமிழகத்து அரசியல் தலைவர்கள்...
எது எப்படியோ விஜயகாந்தை சீண்டி அவரை தனியா தேர்தல் நிற்க வைக்க முயற்சி எடுத்திட்டிருக்கார் முதல்வர் கருணாநிதி. விஜயகாந்த் நடிக்கும் படங்களில் அவர் நிறைய கறுப்பு பணத்தை சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறதுன்னு சொல்லி தன் பங்கை நிறைவு செய்துள்ளார் கருணாநிதி. இப்படி பேசுவதன் மூலம் திமுகவுக்கு எதிராக உள்ள வாக்காளர்களை இரண்டாக பிரிக்கலாம் கனவு காண்கிறார் கருணாநிதி. அது எப்படி சாத்தியம் யோசிக்கீறிங்களா ?
ஒன்று தமிழக பிரதான எதிர்கட்சியான அதிமுகவும், தேமுதிகவும் தனித்தனியாக தேர்தலில் நின்னா ? எதிர்கட்சியினர் வாக்குகள் சிதறும்.. அப்புறம் வழக்கம்போல் வாக்காளர்களுக்கு பணத்தாசை காட்டி தேர்தலில் ஜெயித்து விடலாம் திமுக திட்டம் போட வாய்ப்பு இருக்கு. அப்படி இல்ல 2 கட்சிகளும் கூட்டணி அமைத்துவிட்டால், ஊழல் கட்சியுடன் விஜயகாந்த் கூட்டணி வைச்சுருக்காருன்னு தேர்தல் பிரச்சாரத்தில் மேடைக்கு மேடை பேசலாம்கிறது திமுக கணிப்பா இருக்கலாம்.
ஆனா ஒன்னு நிஜம்ங்க. தேமுதிக இந்த தடவை தனியா நின்னா வேட்பாளர்களே விலை போயிடுவாங்க. ஆந்திராவில் சிரஞ்சீவி கட்சி ஆரம்பிச்சப்ப வந்த கூட்டத்தை பார்த்து அவருதான் அடுத்த முதல்வருன்னு பத்திரிக்கைகள் எல்லாம் செய்தி வெளியிட்டன. கடைசியில் அவரது கட்சி வெறும் 20 இடங்களில் மட்டுமே ஜெயிக்க முடிஞ்சுச்சு...
இதெல்லாம் விஜயகாந்த் கவனமா கருத்தில் எடுத்துகிடனும்கிறது அரசியல் விமர்சகர்களின் கருத்தா இருக்கு.
திண்டிவனத்தில் கட்சி நிர்வாகிகள் திருமணத்தில் கலந்து கொண்ட விஜயகாந்த், எம்.ஜி.ஆருக்கு அப்புறம் ஆட்சிக்கு வந்தவுங்க எல்லாம் மக்களை ஏமாத்திட்டு இருக்காங்னு பஞ்ச் டயலாக் பேசி மக்களின் மனதை கவர்ந்தார்.கூட்டணி இல்லைன்னு களப்பணியாற்றும் தொண்டர்கள் சோர்ந்து போயீடுவாங்க்கிறத அறிந்துள்ள அவர், மக்கள் விரும்பும் கூட்டணி அமையும் சொல்லி இருக்காரு. ஒன்னு அதிமுக கூட கூட்டணி, இல்லைன்னா காங்கிரஸ், பா.ம.க. மற்றும் சிறு கட்சிகளுடன் சேர்ந்து 3 வது அணி அமைக்கலாம். இந்த கூட்டணி தமிழ்நாட்டில் 90 சீட் வரைக்கும் வெற்றி பெற வாய்ப்பு இருக்கு.இப்படி ஒரு ரிசல்ட் வந்தா கண்டிப்பாக தமிழகத்தில் கூட்டணிஆட்சிதான் அப்ப விஜயகாந்த் திட்டப்படி தேமுதிக அமைச்சரவையில் பங்கு கேட்க வாய்ப்பு இருக்கு. மொத்தத்தில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு செஞ்சுட்டாங்க.

அதைதான் விஜயகாந்த் மறைமுகமாக வரும் தேர்தலில் மக்கள் விரும்பு நல்ல கட்சிகளுடன் நான் கூட்டணி அமைப்பேன்னு திண்டிவனம் கூட்டத்தில் முழங்கி இருக்காருன்னு அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 'எக்காரணம் கொண்டும் இனி தி.மு.க. ஆட்சிக்கு வராது.நாம் தனியாக ஆட்சி அமைக்கமுடியாதா? நான் இருக்கிறேன். உங்களை நான் கைவிடமாட்டேன். அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்.
10 எம்.எல்.ஏ., 10 எம்.பி.க்களாக நான் கட்சி நடத்த வில்லை. ஏழைகளுக்காக கட்சி நடத்துகிறேன். 2 கட்சிகளும் ஊழல் செய்துள்ளது. தே.மு.தி.க.வுடன் ஆட்சியை ஒப்படைத்து பாருங்கள் நல்ல ஆட்சியை தருவேன்' என்ற விஜயகாந்தின் வீர ஆவேசம் அவர் அமைக்கும் கூட்டணியை பொறுத்தே... சரி பொறுத்திருந்து பார்ப்போம்.

5 கருத்துக்கள்:

Anonymous said...

தமிழகத்தைப் பொருத்தவரை பத்திரிகையாளர்களின் கணிப்புகள் இதுவரை வெற்றி பெற்றதில்லை.பத்திரிகைகள் தங்களின் விருப்பத்தையே எழுதிவருகின்றன.எந்தச் சார்பும் இல்லாத பத்திரிகைகளோ,பத்திரிகையாளர்களோ தமிழகத்தில் இதுவரை இல்லை.இப்போதும் அப்படித்தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

தேகி said...

மிகச் சரி...செய்தி மக்களிடம் சென்றடைய வேண்டும்...விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பத்திரிக்கைகளுக்கு இல்லை...அவர்கள் வியாபாரிகளாக மாறி நாட்கள் பல ஆகிவிட்டன்...2 மாதங்ளுக்கு முன்பு தலைப்பு செய்தியாக வந்ததை இப்போது பெட்டி செய்தியாக கூட போடுவதில்லை...அடுத்த பரபரப்புக்கு தாவி விட்டனர்...குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்பதற்கு பத்திரிக்கையாளர்களே சாட்சி...!!

Dr. Kanagaraj Easwaran said...

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாக நிகழ இருக்கிறது. எல்லா தரப்பு மக்களும் துன்பப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். தி மு கவினர் ரவுடிகளைத்தவிர யாரும் மகிழ்ச்சியாக இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. பணம் கொடுத்து மக்களை ஏமாற்றும்
யுக்தி நிச்சயம் இந்தமுறை பலிக்காது. மின்னணுவாக்குபதிவு முறை கைவிடப்பட்டு வாக்கு சீட்டு முறை மீண்டும் வர வாய்ப்பு உள்ளது. மின்னணு வாக்குபதிவு முறையின் குளறுபடிகள் வெளியாகி வருகின்றன.
ஊடகங்கள் வணிகமாகிவிட்டது உண்மை என்றாலும். தமிழக ஆட்சிமாற்றதிலும்
வன்முறை அரசியலுக்கு முடிவுகட்டுவதில் அவர்களுக்கு பெரும் பங்குண்டு.
இன்னும் மக்களின் நம்பிக்கையை அவை முற்றிலும் இழந்து விடவில்லை.
நம்பிக்கையை காப்பாற்ற ஊழலை வன்முறையை பகிரங்கப்படுத்த முன்வந்தால் மாற்றம் வரும்.
தமிழகத்தை காப்பாற்றும் பொறுப்பு எதிர்கட்சிகளான அ தி மு க வுக்கும் தே மு தி க வுக்கும் மட்டுமல்ல, தி மு க வுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சிகளுக்கும் உண்டு.
இதனை காங்கிரஸ் தலைமை உணர வேண்டும்
முனைவர் கனகராஜ் ஈஸ்வரன்

Unknown said...

@ முனைவர் கனகராஜ்,
//தமிழக ஆட்சிமாற்றதிலும்
வன்முறை அரசியலுக்கு முடிவுகட்டுவதில் அவர்களுக்கு பெரும் பங்குண்டு.//

சம்பந்தபட்ட தொலைகாட்சி எதிர்கட்சியால் நடத்தப்படுவதாக இருந்தால் மட்டுமே காட்டுவார்கள்..!! இவர்கள் நவீன ஜால்ராக்கள்..!!
-------
//தி மு க வுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சிகளுக்கும் உண்டு.//

ஹா ஹா ஹா...இது நகைச்சுவைக்காக எழுதப்பட்டுள்ளதாக தெரிகிறது...!! காங்கிரஸ் என்றுமே தமிழனுக்காக பேராடியதில்லையே..!! மாறாக நமது அனைத்து போராட்டங்களும் காங்கிரஸை எதிர்த்துதானே இருந்திருக்கிறது..!! இந்த நூற்றாண்டில் கூட ரயில்வே தேர்வு உட்பட மத்திய அரசின் பல தேர்வுகள் இந்தியில் எழுதலாம்...ஆனால் தமிழில் எழுதக் கூடாதாம்..!!
-------
//காங்கிரஸ் தலைமை உணர வேண்டும்//

காங்கிரஸுக்கு தலைமை இருக்கிறதா என்ன...?
இத்தாலி நாட்டுக்காரர்கள் உணர வேண்டும் என்று சொல்லுங்கள்..!!

Dr. Kanagaraj Easwaran said...

ரு கோவணம் அவர்களின் எள்ளல் உரை நன்று. நன்கு சிரித்தேன்.
அவரது வினாக்கள் மெய்யாக வே சிந்தனைக்குரியான. ஒன்று ஊடகங்களின் பாரபட்சம். பெரும்பாலான ஊடகங்கள் அரசியல் கட்சிகளால் ஆதிக்க குடும்பங்களால் அதிகார வேட்கையில் இயக்கபடுகின்றன அல்லது பெரும் பணக்காரர்களால் இலாப நோக்கில் நடத்தப்படுகின்றன. இதில் காணப்படும் கடும் போட்டி உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும். அது தவிர நேர்மையான, கொள்கைத் துடிப்புடைய, மக்கள் உரிமையில் கடப்பாடு உடைய செய்தியாளர்கள் நிறுவனங்கள் இல்லாமல் போகவில்லை. நம்பிக்கையில் இன்னும் மிச்சம் இருக்கிறது.
இரண்டு காங்கிரஸ் கட்சியின் தமிழர் துரோகப்போக்கு. ஐயா காங்கிரஸ் எப்போதும் தமிழ், தமிழருக்கு விரோதமானது அல்ல. எல்லோர்க்கும் கல்வி தந்த கர்மவீரர் கருப்பு காந்தி காமராஜர் காங்கிரஸ் காரர்தான். விடுதலைப்புலிகளை ஒழிக்க இலங்கைக்கு சோனியா மனமோகனர் காங்கிரஸ் அரசு சிங்களவர்க்கு பெரும் ஆதரவு அளித்தது. இலங்கையில் தமிழர் அழிவுக்கு வழிவகுத்தது காங்கிரஸ் என்பது உண்மையே. ஆயினும் தமிழகத்தில் இன்னும் காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு உள்ளதை மறுக்க முடியுமா. பெரும்பாலான சட்டமன்ற மற்றும் பாராளுமன்றத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்ற கூட்டணிகளே வென்றன என்பதை மறுக்க இயலுமா. இது இரு முறைகள் மட்டும் மாறுபட்து. எனவே காங்கிரஸ் கட்சியின் கூட்டணி முடிவு தேர்தல் முடிவை நிர்ணயிப்பதில் முக்கியமானது.
முன்றாவது, காங்கிரசுக்கு தலைமை இல்லை என்பது. ஆம் ஒருகுடும்பம் அக்குடும்பத்தினர் யாராயினும் அவர்களே தில்லியை ஆளவேண்டும் என்ற காங்கிரஸ் காரர்களின் மனோபாவம். காங்கிரசுக்கு மாற்றாக தேசிய அளவில் வலுவான நாடுமுழுதும் பரந்த எல்லா தரப்பு மக்களையும் உள்கொண்ட கட்சி வேறெதுவும் இல்லையே. என்ன செய்ய. இறை நம்பிக்கை கொண்டவன் பிரார்த்தனை மட்டுமே செய்ய முடியும். இறைவா மக்களுக்கு விழிப்புணர்வைக் கொடு

Post a Comment

 
Related Posts with Thumbnails

Sample text