Aug 25, 2010
பேப்பர் படிக்காத அமைச்சர் !
சென்னை பொது மருத்துவமனைக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரை வைக்க வேண்டும் என காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் கலந்து கொண்டு பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், தனது வழக்கமான பாணியில் திமுகவினரை சகட்டு மேனிக்கு விளாசி தள்ளினார். 'காங்கிரஸ்காரன் ஆட்சியில பங்கு கேட்டதான் தர மாட்டீங்க... எங்க தலைவரை பெயரை பொது மருத்துவமனைக்கு வைச்சா குறைஞ்சா போயிருவீங்க' என்று உரிமையுடன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். அந்த கூட்டத்துல அவர் திமுகவை விமர்சித்த ஒவ்வொரு வார்த்தைக்கும் பயங்கர வரவேற்பு... அட இது ஒரு புறம் இருக்கட்டுங்க... இப்ப கதைக்கு வருவோம்... காங்கிரசாரின் கோரிக்கை குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்திடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில் தலை சுத்த வைச்சுதுங்க... அப்படி ஒரு விஷயத்தை நான் கேள்விபடவே இல்லை. கூட்டணி உடைக்க பத்திரிக்கையாளர்கள் சதி செய்றீங்களான்னு எரிஞ்சு விழுந்தார். மேலும் கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளரையும் நீங்க எந்த த்திரிக்கைன்னு கேட்டுட்டுதான் அங்கிருந்து நகர்ந்தார். பத்திரிக்கையாளர் கருணாநிதி (!) தலைவராக இருக்க கட்சியின் சார்பில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றும் அமைச்சராகி இருக்கிற பன்னீர் செல்வம் செய்தி படிக்க கூட நேரம் இல்லபோல... முரசொலி படிச்சா மட்டும் போதும் நாளைய வரலாறை தெரிந்து கொள்ளலாம்னு முடிவு பண்ணிட்டாரு போல... பன்னீர் செல்வம் பேசாமல் ஒரு மீடியா ஸ்கூல் ஒன்னு ஆரம்பிக்கலாம். அதுல பத்திரிக்கையாளர் எந்த கேள்வி எல்லாம் கேட்க கூடாதுன்னு கிளாஸ் எடுக்கலாம். நல்ல ஐடியா மிஸ் பண்ணீராதீங்க.
1 கருத்துக்கள்:
எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது லேட்டா வருவதை பழக்கமாக கொண்டிருக்கிறார் பன்னீர் செல்வம். இவர் பயங்கரமான சோம்பேறி. சுகாதார துறை அமைச்சராக இராமச்சந்திரன் இருந்த போது கொண்டுவந்த திட்டங்கள் தான் இவருக்கு கை குடுத்து வருகிறது. ஆனால் இவர்க்கும் இவரது துறையில் நடக்கும் திட்டங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடந்த வாரம் கருணாநிதி இவரை கேவலமாக திட்டி தீர்த்திருக்கிறார்.
Post a Comment