Sep 29, 2010

மூடனின் புது நம்பிக்கை


மூட நம்பிக்கையை எதிர்ப்போம் என்று பொய் வேஷம் போட்டுக் கொண்டு திரியும் ஒரு மூடனின் நம்பிக்கை பற்றி ஒரு கதை வழியாக பார்ப்போம்.


மனிதனாக பிறப்பது இயற்கை நிகழ்த்தும் அதிசயம் என ஊர் பண்ணையார் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்குகிறார். இதற்காக கடவுள்களை கும்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் ஊர் மக்களுக்கு அறிவுரை வழங்கி கொண்டிருந்தபோது, அந்த ஊரின் முக்கிய பிரமுகர் ஒருவர் நெற்றியில் குங்கும பொட்டு இட்டுக்கொண்டு வருவதை பார்த்து நெற்றியில் ஏன் ரத்தம் வழிகிறது என கேட்கிறார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் அவரை பலரது முன்னிலையில் ஏளனம் செய்கிறார் ஊர் பண்ணையார்.

இப்படிபட்ட பண்ணையார் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவில் விழா ஒன்றில் கலந்து கொள்ள அவருக்கு அழைப்பு வருகிறது. அப்போது கோவிலின் முன் வாசல் வழியாக சென்ற தலைவர்கள் பலர் இறந்துவிட்டனர் என ஜோதிடர் ஒருவர் பண்ணையாரிடம் கூறுகிறார். பண்ணையாரோ ஊரில் உள்ள எல்லோரையும் நாம் ஏளனம் செய்துவிட்டு மூடநம்பிக்கையை காரணமா வெச்சுகிட்டு கோவில் விழாவில் கலந்து கொள்ளாமல் இருந்தால், நமக்கு மூட நம்பிக்கை இருக்கிறது என்ற உண்மை உலகிற்கு தெரிந்துவிடுமே என அஞ்சுகிறார்.

உடனே அதற்கு மாற்று வழி ஏதாவது இருக்கிறதா என ஜோதிடரிம் கேட்கிறார். முக்கிய பாதை வழியாக கோவிலுக்கு செல்லாமல் கோவிலின் மற்றொரு பக்கம் வழியாக கோவிலுக்கு செல்லுங்கள் என்று ஜோதிடர் அவருக்கு அறிவுரை வழங்கினாராம். இப்படி பல நாட்கள் கடவுளுக்கு எதிராக பேசிக்கொண்டு வீட்டில் திருட்டு தனமாக சாமி கும்பிட்டு கொண்டிருந்த பண்ணையாரின் முகத்திரையை அவரது மகனே காட்டி கொடுத்து விடுகிறார்.

இது என்ன புதுக்கதை என நீங்கள் கேட்பது புரிகிறது. பண்ணையாரின் 2 வது மனைவியின் மகன்களுள் ஒருவரான டாலினை அடுத்த பஞ்சாயத்து தேர்தலில் தலைவராக்க திட்டமிடுகிறார். இதற்காக பல்வேறு சூட்சம கலைகளை கற்று கொடுக்கிறார் பண்ணையார். ஆனால் அப்பாவை போல் திறமையாக நடிக்க தெரியாத சின்ன பண்ணையார், அப்பா கொண்டு வந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு இணையதளம் மூலம் விளம்பரம் ஒன்று கொடுக்கிறார். அந்த விளம்பரத்தில் காலன் வீசும் கயிற்றை தடுக்கும் கலைஞர் காப்பீட்டு திட்டம்.

அட இப்ப புரிஞ்சுதா அந்த பண்ணையார் கருணாநிதிதான் என்று, சின்ன பண்ணையார் வேற யாரும் இல்லைங்க.. ஸ்டாலின்தான்.

இவுங்க நடத்தற கூத்தைதான் கதையா சொன்னேன். ஸ்டாலின் தலைமையின் கீழ் செயல்படும் இளைஞர் அணியினர் பேஸ் புக் இணையத்தில் இப்படி அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட படத்தை விளம்பரமா போட்டிருக்காங்க... அந்த விளம்பரத்தை பார்க்கனுமா ...
http://www.facebook.com/home.php?#!/DMKYW

1 கருத்துக்கள்:

Unknown said...

facebook சுட்டி தவறாக உள்ளது என நினைக்கிறேன்...சரிப் பார்க்கவும்..

Post a Comment

 
Related Posts with Thumbnails

Sample text