Sep 12, 2010

காவல்துறையின் காட்டாட்சி - பதற வைக்கும் வீடியோ காட்சி

(காவல்துறையின் கண்ணியம் மிக்க வார்த்தைகள் கடைசி 15 நொடிகளில்...)
சென்னை அருகே இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்டது குறித்து தகவல் சேகரிக்க சென்ற செய்தியாளர் மீது  காவல்துறை அதிகாரி தாக்குதல் நடத்தினார். இளம் பெண் கொலையில் மர்மம் இருப்பதாக கூறப்படும் நிலையில், கொலை பற்றிய தகவல்களை மறைக்கும் நோக்கில் காவல்துறை அதிகாரி நடந்து கொண்டது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பள்ளிக்கரணையை அடுத்த சாய்கணேஷ் நகரில் இளம் பெண் ஒருவர் எரித்துகொல்லப்பட்ட நிலையில் கிடப்பதாக தகவல் பரவியது. இதனை அறிந்த செய்தியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், காவல்துறையினர் அவர்களை தகவல் சேகரிக்க விடாமல் தடுத்தனர்.
இதுகுறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய மடிப்பாக்கம் உதவி ஆணையர் தங்கரத்தினம் தகாத வார்த்தைகளாலும் சாடினார்.
அண்மை காலமாக, மடிப்பாக்கம் பகுதியில் இதுபோன்ற கொலை மற்றும் நில மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து நடவடிக்கை  எடுக்க போலீசார் தயக்கம் காட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில்கொலை பற்றிய தகவல்களை போலீஸ் அதிகாரியே மறைக்க முயன்ற சம்பவம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன் தொடர்புடைய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

13 கருத்துக்கள்:

மாயாவி said...

வாழ்த்துக்கள்.

உங்கள் வலைப்பதிவில் பின்னூட்டம் இடக்கூட மற்ற வலைப்பதிவர்கள் பயப்படுகிறார்கள் என நினைக்கிறேன்.

தைரியமாக தொடருங்கள்.

mainstream media said...

நன்றி மாயவியாரே,
உங்களை போன்றவர்களின் ஆதரவு இருந்தால் பல உண்மைகளை உலகிற்கு சொல்லமுடியும்.

கீரா said...

manathaiyiyaththai thaandi pana thaiyiyamum athigaara thaiyiyamum nirampa petravargalidam yethirththu yenna seivathu yenkira mananilai thaan thozhargale

naren said...

My god. How can a responsible police speak like this

Unknown said...

policeku payandu poiteenga,, avar mugathil neenga eachil thupi irukalam..

இளங்குமரன் said...

மனத்தை வேதனைப்படுத்தும் தகவல். அந்த நேரத்தில் நீங்கள் பட்ட அவமானம் உங்களால் மட்டுமே அதை முழுமையாக உணர முடியும்.

நண்பர் இராஜேஸ் சொன்னபடி முகத்தில் நீங்கள் எச்சில் துப்புங்கள். மறக்காமல் இராஜேஸையும் அழைத்துச் செல்லுங்கள். அடிவாங்கிக் கொள்ளத்தான்.

mainstream media said...

நண்பர் ராஜேஷின் கோபம் எங்களுக்கும் உண்டு. அதற்காக வன்முறை தீர்வாகாது. எதிரியின் பலவீனம் என்ன என்பதை அறிந்துதான் செயல்பட வேண்டும். அதுவே சிறந்த வழியும் ஆகும். உங்களுடைய ஆதரவிற்கு நன்றி ராஜேஷ்.

Anonymous said...

Can you please upload the videos in youtube....

Anonymous said...

காவல்துறை எப்போது காமத்துறை ஆனது?

Anonymous said...

//காவல்துறை எப்போது காமத்துறை ஆனது?//

@anonymous - உங்கள் கேள்விக்கு பதில் எனக்கு தெரியாது...ஆனால் காவல்துறை எப்போதாவது காவல் துறையாக இருந்திருக்கிறதா..? :)
ஆளும் கட்சியின் கூலிப் படையாகத் தானே பல நேரங்களில் இருந்திருக்கிறது..!!

Unknown said...

இளங்குமரன் ஐயா,
சவுக்கியமா..? ஆர்குட்டில் பார்த்தது...இங்கேயும் இணைகிறோம்...

Anonymous said...

The Last video is not working.

Anonymous said...

pls reupload the last video

Post a Comment

 
Related Posts with Thumbnails

Sample text