Sep 11, 2010

நடுநிலைமையான இணையதளத்திற்கு உதவுங்கள்


அன்பு நண்பர்களே,

தமிழகத்தில் இருந்து விருப்பு, வெறுப்பிற்கு அப்பாற்பட்டு வரும் . நடுநிலைமையான இணையதள இதழ் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது என்பதை அறியும் போது மனம் பதைபதக்கிறது. பல்வேறு சமூக பிரச்சினைகள் குறித்து தீர ஆராய்ந்து வெளி வரும் கீற்று இணைய தள இதழ் தொடர வேண்டும் என்று நினைப்பவர்கள் தயவு கூர்ந்து உதவுங்கள். கீற்று ஆசிரியர் குழு வியாபார நோக்கிற்காக இணையதளத்தினை நடத்திவரவில்லை. சமூக மாற்றத்திற்காக மட்டுமே நடத்தி வருகின்றனர் என்பதை உங்களின் கனிவான பார்வைக்கு தெரிவிக்கின்றோம்.

நன்றியுடன்,
ஜுனியர் ரிப்போர்ட்டர்



Dedicated server என்றால் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு பதிவு செய்வதாக இருந்தால் இரண்டு லட்சம் வேண்டும். (https://www.lpdedicated.com/signup/order:dedicated2) அது கீற்று இணையதளத்திற்கு மிகப்பெரிய தொகை.
கீற்றில் இணையும் சிற்றிதழ்களின் எண்ணிக்கையும், கீற்றிற்கு வரும் படைப்புகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது. முழுநேர ஊழியர் இல்லாமல், இவற்றை எல்லாம் வலையேற்றுவது மிகவும் சிரமமான செயலாக இருக்கிறது. முழுநேர ஊழியர் என்றால், குறைந்தது மாதம் ரூபாய் ஐயாயிரம் சம்பளம் தர வேண்டும்.
கடந்த ஜூலை மாதம் ‘இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்’ கருத்தரங்கை நடத்திய வகையில் ரூ.10,000 கடன் என்பதுதான் கீற்றின் நிதிநிலைமை. எனவே கீற்று தொடர்ந்து வெளிவருவது வாசகர்கள் கையில்தான் உள்ளது. கீற்று வெளிவருவது அவசியம் என்று கருதும் வாசகர்கள் நிதியுதவி அளிக்குமாறு வேண்டுகிறோம்.
அடுத்த சில நாட்களில் தளம் செயலிழப்பதற்கு வாய்ப்பு உள்ளதால், கீற்று இணையதளத்தின் படைப்புகள், சிற்றிதழ்கள் அனைத்தையும் backup எடுத்துள்ளோம். போதிய அளவு நன்கொடை கிடைத்தால், நிச்சயம் கீற்று பழையபடி வெளிவரும் என்று நம்புகிறோம்.
என்றும் அன்புடன்
கீற்று நந்தன்

0 கருத்துக்கள்:

Post a Comment

 
Related Posts with Thumbnails

Sample text