Sep 2, 2010

தமிழகத்தில் ரவுடியாக வலம் வர தகுதி என்ன ?


மதுரை தினகரன் அலுவலகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவினரால் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதில் அப்பாவி ஊழியர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு எல்லாம் காரணம் தினகரன் நாளிதழில் வெளியான கருத்து கணிப்பு என்பது எல்லோருக்கும் தெரியும். உடனே பொங்கி எழுந்த சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன், தமிழகத்தில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துவிட்டதாக தனது சன் டிவியில் செய்தியும் வெளியிட்டார். இதற்கு எல்லாம் காரணம் ரவுடி அழகிரி கும்பல்தான் என்றும் அந்த சேனல் வசைப்பாடியது. இதற்கு காரணமானவர்கள் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். என்ன ஆச்சரியம் கருணாநிதி ஆட்சியில் திமுகவினரையே போலீசார் சிறையில் அடைத்து விட்டனரே என்று அனைவரும் வியப்புடன் கேட்டுக்கொண்டனர். ஆனால் இந்த நாடகம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி அண்ணாதுரையின் பிறந்த நாளை முன்னிட்டு  ஆயிரத்து 400 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களின் நன்னடத்தையே விடுதலைக்கு காரணம் என கருணாநிதி விளக்கம் வேறு கொடுத்தார். இப்படி விடுதலையானவர்களின் தினகரன் பத்திரிக்கை எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அட்டாக் பாண்டி மற்றும் அவரது ஆதரவாளர்களும் அடக்கம். அப்படி என்றால் இதற்கு என்ன அர்த்தம் ரவுடித்தனம் செய்பவர்கள் திமுகவினர் என்றால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி விடுதலையாகி விடலாம் என்பது போல் அல்லவா? இருக்கிறது. சரி விடுங்கள் இது பழைய கதை. இப்படி விடுதலை செய்யப்படுவது சட்டத்திற்கு புறம்பானது என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை நீதிமன்றமும் விசாரணைக்கு ஏற்று கொண்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜரான சுப்பிரமணிய சுவாமி, வரும் செப்டம்பர் 15ம் தேதி அண்ணாத்துரை பிறந்த நாளான்று 2 ஆயிரம் கைதிகளை திமுக அரசு விடுதலை செய்ய திட்டமிட்டுள்ளதாக பகீர் தகவலை தெரிவித்துள்ளார். இதனை அறிந்த ஜுனியர் ரிப்போர்ட்டர் சுப்பிரமணிய சுவாமியை தொடர்பு கொண்டு உங்களிடம் ஆதாரம் ஏதாவது இருக்கிறதா என கேட்டதற்கு, தனக்கு நம்பதகுந்த தகவல் கிடைத்துள்ளதால்தான் நீதிமன்றத்தில் அப்படி ஒரு தகவலை தெரிவித்துள்ளதாக கூறினார். இதில் இருந்து ஒன்று மட்டும் புலனாகிறது. ரவுடிதனம் செய்துவிட்டு வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டுமா ? உடனடியாக திமுகவில் இணைய வேண்டும். மீதியெல்லாம் மாண்புமிகு முதலமைச்சர்  பார்த்து கொள்வார். இல்லையென்றால் ஜுனியர் விகடனில் அழகிரியின் வலதுகரமாக செயல்படும் பொட்டு சுரேஷ் குறித்து வெளியான    செய்திக்கு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அளவிற்கு போராட்டம் நடத்துவோம் என்று தினமலர் நாளிதழில் விளம்பரம் கொடுக்க முடியுமா ? மதுரை முழுவதும் ஜு.வி. ரிப்போர்ட்டரை மிரட்டும் தொனியில் வால்போஸ்டர் ஒட்ட முடியுமா ?  எனது அன்பு உடன் பிறப்பான ரவுடிகளே சட்டத்தை கண்டு அஞ்சாதீர்கள், திமுக ஒருபோதும் தொண்டனை கைவிட்டுவிடாது என முரசொலியில் கருணாநிதி கட்டுரை எழுதினாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை. அது சரி அண்ணாமலை பல்கலை கழகத்தில் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்க கூடாது என போராட்டம் நடத்திய இளைஞர் ஒருவர் மர்மமான கொல்லப்பட்ட சம்பவத்தை நாம் மறக்கதான் முடியுமா ?   

0 கருத்துக்கள்:

Post a Comment

 
Related Posts with Thumbnails

Sample text