|
ரவுடிகும்பலால் காரும், செக்கர்ஸ் ஹோட்டலும் அடித்து நொறுக்கப்பட்டன |
|
வட்டத்தில் இருப்பவர் சக்சேனா |
மேலே படத்தில் உள்ளது சென்னையில் உள்ள செக்கர்ஸ் ஹோட்டலை ஒரு கும்பல் அடிச்சு நொறுக்கி இருக்காங்க. ஆனா இவுங்களை பத்தின செய்தி எந்த தொலைக்காட்சியிலும் (ஜெயா டிவியை தவிர) வரலை. இந்த தாக்குதலை நடத்தினவுங்க மேல் உள்ள பயம் காரணமாதான் செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபடவில்லை. அப்படி யார் இந்த ரவுடிங்கன்னு நீங்க நினைக்கிறது சரிதான், சன் டிவி குழுமத்தின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் சக்சேனா என்பவர்தான் இந்த ரவுடிகூட்டத்தை அனுப்பி ஹோட்டலை அடிச்சு நொறுக்கி இருக்காரு. இதுகுறித்து செய்தி கிடைத்தவுடன் பத்திரிக்கையாளர்கள் எல்லாம் செய்தி சேகரிக்க சென்றாங்க. ஆனால் அந்த செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்படவில்லை. ஏன்னா ? அவுங்க கையில்தான் தமிழ்நாட்டின் கேபிள் டிவி நெட்வொர்க்கையே கையில் வைச்சிருக்கும் சுமங்கலி கேபிள் விஷன் இருக்கு. இதனால்தான் நடுநிலைமையான செய்திகள் மக்களுக்கு கிடைக்கனும்கிற எண்ணத்தில் ஐஏஎஸ் அதிகாரி உமா சங்கர் , சுமங்கலி கேபிள் விஷனை நாட்டுடமையாக ஆக்கனும்னு முதலமைச்சர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார். உடனே அவர் பொய் சான்றிதழ் கொடுத்தாருன்னு சொல்லி நேர்மையான அதிகாரியான உமாசங்கரை கருணாநிதி சஸ்பெண்ட் செஞ்சாரு. இப்படி மக்களை ஏமாற்றும் கூட்டத்தில் இருந்தும், மீடியாவை ஆதிக்கம் செலுத்தும் ரவுடி கும்பலிடமிருந்தும் மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பை எல்லோரும் ஒற்றுமையை சேர்ந்து செஞ்சாதான், அடுத்த தலைமுறையினருக்கு உண்மையான வரலாறும் செய்தியும் கிடைக்கும். ஹோட்டலில் இருந்த பெண்ணை அடித்து துன்புறுத்திய குற்றத்திற்காக பெண் கொடுமை சட்டத்தின் கீழ் சக்சேனாவிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை அவரை கைது செய்யுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
3 கருத்துக்கள்:
சன் டிவி குழுமத்தின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் சக்சேனா என்பவர்தான் இந்த ரவுடிகூட்டத்தை அனுப்பி ஹோட்டலை அடிச்சு நொறுக்கி இருக்காரு//
why??details pls??
காரில் வந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே சக்சேனா அடியாட்களை அனுப்பி இப்படி அடாவடிதனத்தில் ஈடுபட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையான பின்ணனி குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஜுனியர் ரிப்போர்ட்டர் இறங்கியுள்ளது.
thans for your reply
Post a Comment