Sep 27, 2010

இரண்டு திரைப்படக் காட்சிகளும் சில சிந்தனைகளும்



காட்சி 1:
மன்னன்என்றொரு தமிழ்ப்படம்தமிழகத்தின் முன்னணி நடிகர் நடித்த படம் அதுகூலித் தொழிலாளியாகத் தொடக்கத்தில் வரும் நடிகர், பின்னர் அவர் வேலை பார்க்கும் தொழிற்சாலையின் முதலாளியின் மகளை மணப்பதன் மூலம் முதலாளியாகவும் ஆகிவிடுவார்கூலித் தொழிலாளியாக இருக்கும்போது இயல்பாக இருக்கும் அவர், முதலாளியான உடன் பெரும் 


பணக்காரர்கள் நடுவில் திடீரென ஆங்கிலத்தில் உரையாடுவார்இப்படி ஒரு காட்சி அப்படத்தில் வரும்போது திரையரங்கில் உள்ள இரசிகர்கள் எல்லாரும்  கை தட்டி ஆரவாரிப்பர்.  ‘ஆகாநம்முடைய தலைவன் பெரும்பணக்காரர்களுக்கு நிகராக ஆங்கிலத்தில் உரையாடுகிறாரே!’  என்னும் உள்ளுணர்வின் வெளிப்பாடு அது


காட்சி 2:
          மேலே குறிப்பிட்டுள்ள அதே நடிகர் நடித்த இன்னொரு படம்படிக்காதவன்’  இதிலும் இவர் தொழிலாளி தாம்கடுமையாக உழைத்து தம்பியைக் காப்பாற்றுவார்ஒருமுறை தம்பி நடிக்கும் நாடகத்தைப் பார்க்கப் போவார்அப்போது பக்கத்தில் இருக்கும் ஆங்கிலப் பெண் ஒருத்திமணி என்ன?’ என்று ஆங்கிலத்தில் கேட்பாள்; இவருக்கோ ஆங்கிலம் தெரியாது. ஆனால் தெரிந்தது போல்தாங்கி யூஎன்று தொடர்பே இல்லாமல் விடை சொல்வார்இரசிகர்கள் இதைக் கேட்டுச் சிரிப்பார்கள்.  
          இந்த இரண்டு காட்சிகளின் வழியாக நமக்குத் தெரிய வரும் உண்மை என்ன
1)   ஆங்கிலம் பணக்காரர்களின் மொழி; பண்பட்ட மொழி.
2)   அதைத் தவறாகப் பேசுவது சிரிப்புக்குரியது
இப்படிச் சொல்லிக் கொடுத்ததன் விளைவு, நம்மூர்க்காரர்கள் யாராவது ஆங்கிலத்தைத் தவறாகப் பேசினால் அந்த இடத்திலேயே பல பேர் முன் அவரைப் பார்த்துச் சிரித்து, பேசியவரை ஏளனப்படுத்தி விடுவது - இல்லை எனில் அவர் போன பின் வீட்டில் இருப்போரிடம் அவர் பேசியதைச் சொல்லிச் சிரிப்பது என நாமும் செய்துகொண்டிருக்கிறோம்.  ஆனால்உங்களுடைய தாய்மொழி என்ன?’ என்று கேட்டால்தமில்என்று சொல்லிக் கொண்டிருப்போம்.   இது சரியா

ஆங்கிலம் என்பது ஒரு வெளிநாட்டு மொழியாகும்அதை எந்த வெளிநாட்டு ஆளும் வந்து நமக்குச் சொல்லிக் கொடுக்கவில்லைநாமும் வெளிநாட்டில் இல்லைஇந்த ஊரிலேயே பிறந்து இங்கேயே வளர்ந்து படித்த ஒருவர் தாம் நமக்குச் சொல்லிக் கொடுத்திருப்பார்அதை நமக்குப் புரிந்து கொண்ட அளவிலோ தெரிந்த அளவிலோ மட்டும் பேசுவதில் என்ன தவறு?  தாய்மொழி இல்லாத இன்னொரு மொழியைப் படிக்கும் போது தவறு வருவது இயல்புஆனால் இதை எல்லாம் மறந்து ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள் முட்டாள்கள் என்பது போலவும் பண்பாடு இல்லாதவர்கள் போலவும் நினைப்பது சரியா?    நம்முடைய தாய்மொழியைத் தவறாகப் பேசிக் கொண்டிருப்போம்!  (‘என் குலந்தைக்கு டமில் வராது!’ எனச் சில வேளைகளில் பெருமையாகச் சொல்வோரும் உண்டு) ஆனால் அதைப் பற்றிக் கவலையே பட மாட்டோம் என்பது சரியாசிந்திப்போமே!   

1 கருத்துக்கள்:

Anonymous said...

நல்ல செய்தி. எனக்கும் எழுத்து பிழைகள் வருவதுண்டு.திருத்த முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். ஆனால் சில விஷயங்கள் நெருடலாக உள்ளது.. “முடிவு உங்கள் கையில்,பிரதமர் ம(ண்)மோகனின் தேசிய கவலை,அதோத்தியும் சட்டமும் ஓர் அலசல்” என சில பதிவுகளின் தலைப்பே தமிழில் உள்ளது..! “காவல்துறையின் காட்டாட்சி-பதற வைக்கும் வீடியோ காட்சி, அயோத்தி தீர்ப்பு-காமெடி க்ளைமாக்ஸ்” - வாசகர்களை பரபரப்பிற்கு உள்ளாக்குவதும்,பதற வைப்பதும் மட்டுமே நோக்கமாக கொண்டு வைத்த பெயர் போல் உள்ளது! மற்றப்படி அதில் தமிழ் இல்லை...நீங்கள் சொல்வது போல் ”டமிலில் நன்றாக எலுதுகிரீர்கல்”

Post a Comment

 
Related Posts with Thumbnails

Sample text